உலகக் கோப்பை கால்பந்து: கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 கணக்கில் சுவிட்சர்லாந்து வெற்றி

ரூபென் வர்கஸ் கோல் அடிக்க சுவிட்சர்லாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.
உலகக் கோப்பை கால்பந்து: கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 கணக்கில் சுவிட்சர்லாந்து வெற்றி
Published on

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் க்ரூப் பி-யில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து மற்றும் கனடா அணிகள் மோதின.

பி.சி. பிளேஸ் வேன்கோவரில் நடைபெற்ற இந்தப் போட்டி தொடக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்தது. ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் கணக்கை தொடங்க முனைப்பு காட்டினர்.

எனினும், ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணி வீரர்களாலும் கோல் கணக்கை தொடங்க முடியவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியதும் சுவிட்சர்லாந்து அணியின் ஜோஹன் மன்சாம்பி அசிஸ்ட்-ஐ சரியாக பயன்படுத்திக் கொண்ட ரூபென் வர்கஸ் கோல் அடிக்க சுவிட்சர்லாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து 57-ஆவது நிமிடத்தில் பி எம்போலோ அசிஸ்ட்-ஐ பயன்படுத்தி ஜோஹன் மன்சாம்பி கோல் அடிக்க சுவிட்சர்லாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து 76-ஆவது நிமிடத்தில் கனடிய வீரர் நேதன் சலிபா வழங்கிய அசிஸ்ட்-ஐ பயன்படுத்தி பிராமிஸ் டேவிட் தனது அணிக்காக கோல் அடித்தார்.

ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளாலும் கோல் கணக்கை மாற்ற முடியவில்லை. இதனால் சுவிட்சர்லாந்து அணி 2-1 கணக்கில் வெற்றி பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com