உலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்

நாக்-அவுட் சுற்று போட்டி டல்லாஸ் மைதானத்தில் நடந்தது.
உலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்
Published on

உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் நாக்-அவுட் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் கடைசியில் கோல் அடித்ததால் ஸ்பெயின் அணி 0-1 கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி காரணமாக ஸ்பெயின் அணி நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்த ஆட்டம் போர்ச்சுகல் அணி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரசிகர்ளுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே இதுதான் தான் விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடர் என்று ரொனால்டோ தெரிவித்தார். இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் வெற்றி, தனது அணிக்காக ரொனால்டோ கோல் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

கோல் இல்லை:

ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர். ஆட்டத்தின் முதல் பாதிக்கான இடைவெளி வரையிலும் இரு அணி வீரர்களாலும் கோல் அடக்க முடியவில்லை. இருப்பினும், ஆட்டம் அதன் சுவாரஸ்யத்தை இழக்கவில்லை. இந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த எதிர்பார்ப்புடன் ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது.

இரு அணி வீரர்களும் கோல் கணக்கை தொடங்கி, ஆட்டத்தில் முன்னிலை பெற முனைப்பு காட்டினர். எனினும், ஆட்டத்தின் கடைசி வரை கோல் கணக்கு தொடங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து ஆட்டத்தின் 90-ஆவது நிமிடத்தில் அந்த மேஜிக் நிகழ்ந்தது.

யாரும் எதிர்பாராத சூழலில் ஸ்பெயின் வீரர் மிகெல் மெரினோ தனது அணிக்காக கோல் அடித்தார். இவருக்கு ஃபெரன் டொரெஸ் அசிஸ்ட் செய்தார். இதன் காரணமாக 1-0 என்ற கணக்கில் ஸ்பெயின் முன்னிலை பெற்றது.

கூடுதல் நேரம்:

ஆட்டம் தொங்கியது முதலே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்காதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ஆட்டத்தின் கடைசியில் கோல் அடிக்கப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் கடைசி வாய்ப்பாக கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரம் முடியும் வரையிலும் போர்ச்சுகல் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து ஸ்பெயின் அணி 1-0 கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. இதன் மூலம் ஸ்பெயின் அணி நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அணிக்காக களமிறங்கிய கடைசி போட்டியாக இது அமைந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com