உலகக் கோப்பை கால்பந்து: ஐவரி கோஸ்ட் அணிக்கு எதிரான போட்டியில் நார்வே 2-1 கணக்கில் அபார வெற்றி

பேட்ரிக் பெர்க் அசிஸ்ட்-இல் எர்லிங் ஹாலேண்ட் கோல் அடித்து அசத்தினார்.
உலகக் கோப்பை கால்பந்து: ஐவரி கோஸ்ட் அணிக்கு எதிரான போட்டியில் நார்வே 2-1 கணக்கில் அபார வெற்றி
Published on

உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் ஐவரி கோஸ்ட் மற்றும் நார்வே அணிகள் மோதின. டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டின.

நார்வே அணி வீரர்கள் ஆக்ரோஷ ஆட்டத்தால் 39-ஆவது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெற்றது. மார்டின் ஒடிகார்ட் அசிஸ்ட்-இல் அந்தோனியோ நூஸா கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பாதி வரை நார்வே அணி 0-1 கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதி ஆட்டம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்க 74-ஆவது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் அணியின் அமத் டியலோ தனது அணிக்கு கோல் அடித்தார். நிகோலஸ் பெபெ அசிஸ்ட்-இல் கோல் ஐவரி கோஸ்ட் கோல் அடித்ததன் மூலம் ஆட்டம் சமநிலைக்கு வந்தது.

நார்வே வெற்றி:

சமநிலையை தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோல் கணக்கை அதிகப்படுத்த முனைப்பு காட்ட நார்வே அணி ஆட்டத்தின் 86-ஆவது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தில் மீண்டும் முன்னிலை பெற்றது. பேட்ரிக் பெர்க் அசிஸ்ட்-இல் எர்லிங் ஹாலேண்ட் கோல் அடித்து அசத்தினார்.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இறுதிவரை ஐவரி கோஸ்ட் கோல் அடிக்காததால், நார்வே அணி 2-0 கணக்கில் வெற்றி பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com