உலகக் கோப்பை கால்பந்து: ஸ்வீடனை 3-0 கணக்கில் வீழ்த்தியது பிரான்ஸ்

எம்பாப்பே கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார்.
உலகக் கோப்பை கால்பந்து: ஸ்வீடனை 3-0 கணக்கில் வீழ்த்தியது பிரான்ஸ்
Published on

உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் நடந்த போட்டியில் ஸ்வீடனை எதிர்கொண்டு களமிறங்கிய பிரான்ஸ் 3-0 கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே கோல் கணக்கை தொடங்க இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டினர். எனினும் , முதல் பாதி முடியும் வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டத்தின் முதல் பாதி முடிவுக்கு வரும் தருவாயில் பிரான்ஸ் அணியின் எம்பாப்பே கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார்.

பிரான்ஸ் முன்னிலை:

ஒஸ்மேன் டெம்பெலெ அசிஸ்ட்-இல் எம்பாப்பே அசத்தலாக கோல் அடித்தார். பிறகு இடைவெளியை தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. இந்த முறை ஆட்டம் தொடங்கியதும் பிரான்ஸ் கோல் கண்கை அதிகப்படுத்தியது.

ஆட்டத்தின் 53-ஆவது நிமிடத்தில் மைக்கேல் ஒலிஸ் அசிஸ்ட் செய்ய பிராட்லி பார்கோலா கோல் அடிக்க பிரான்ஸ் அணி 2-0 கணக்கில் முன்னிலை பெற்றது.

எம்பாப்பே அசத்தல்:

ஒருபக்கம் இரு அணிகளும் வீரர்களை மாற்றுவதில் தீவிரம் காட்ட மறுப்பக்கம் பிரான்ஸ் தனது கோல் கணக்கை அதிகப்படுத்தியது. ஆட்டத்தின் 74-ஆவது நிமிடத்தில் மைக்கல் ஒலிஸ் அசிஸ்ட்-ஐ எம்பாப்பே கோலாக மாற்றினார்.

இதனால் பிரான்ஸ் 3-0 என வலுவான நிலைக்கு முன்னேறியது. இதில் இரு கோல்களை எம்பாப்பே அடித்தார்.

இதைத் தொடர்ந்து ஸ்வீடனின் கோல் அடிக்கும் முயற்சிகள் கடைசி வரை அந்த அணிக்கு சாதகமாக மாறவில்லை. இதனால், ஆட்டத்தின் இறுதியில் பிரான்ஸ் 3-0 கணக்கில் வெற்றி பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com