உலகக் கோப்பை கால்பந்து: நார்வே அணிக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் 1-4 கணக்கில் வெற்றி

மற்றொரு கோல் அடிக்க அந்த அணி 1-3 கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.
உலகக் கோப்பை கால்பந்து: நார்வே அணிக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் 1-4 கணக்கில் வெற்றி
Published on

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் நார்வே மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. போஸ்டன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் கணக்கை தொடங்க முனைப்பு காட்டினர்.

ஆட்டம் தொடங்கிய 7-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஔஸ்மேன் டெம்பெலெ அசிஸ்ட்-இல் எம்பாப்பே கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் பிரான்ஸ் அணி 0-1 கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து 20-ஆவது நிமிடத்தில் எம்பாப்பே அசிஸ்ட்-இல் டெம்பெலெ கோல் அடிக்க பிரான்ஸ் அணி 0-2 கணக்கில் முன்னிலை பெற்றது.

21-ஆவது நிமிடத்தில் நார்வே வீரர் ஆண்ட்ரியஸ் ஸ்கெல்டெரப் அசிஸ்ட்-இல் தெலோ அசர்கார்டு கோல் அடிக்க நார்வே அணி 1-2 என கணக்கை தொடங்கியது. 32-ஆவது நிமிடத்தில் டெம்பெலெ பிரான்ஸ் அணிக்காக மற்றொரு கோல் அடிக்க அந்த அணி 1-3 கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் முதல் பாதி வரை பிரான்ஸ் அணி 1-3 கணக்கில் முன்னிலையை தொடர்ந்தது. தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் நார்வே அணி கோல் அடிக்கும் முயற்சிகளுக்கு பலனிளிக்கவில்லை. ஆட்டத்தின் இறுதியில் பிரான்ஸ் அணி டிசெய்ர் டௌ கோல் அடிக்க 1-4 கணக்கில் முன்னிலை பெற்று அபார வெற்றி பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com