

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் போர்ச்சுகல் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. ஹூஸ்டன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் துவக்கம் முதலே பரபரப்பு தொற்றிக் கொண்டது.
போர்ச்சுகல் அணி துவக்கம் முதலே கோல் அடிக்க முனைப்பு காட்டியது. இதற்கு பலனளிக்கும் வகையில் 6-ஆவது நிமிடத்திலேயே போர்ச்சுகல் தனது கோல் கணக்கை தொடங்கியது.
ரொனால்டோ கோல்:
ஜௌ கேன்செலோ அசிஸ்ட்-ஐ சரியாக பயன்படுத்திக் கொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து அசத்தினார்.
இந்த கோல் மூலம் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 6 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் ஆர்.ஆர். காங்கோ அணியை எதிர்கொண்ட வெற்ற பெற தவறியது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. மேலும், இந்த ஆட்டத்தில் ரொனால்டோ கோல் அடிக்காமல் போனது பேசு பொருளானது.