உலகக் கோப்பை கால்பந்து: ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் 2-0 கணக்கில் வெற்றி

ஆட்டத்தின் முதல் பாதி வரை கோல் கணக்கை தொடங்க முடியவில்லை.
உலகக் கோப்பை கால்பந்து: ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் 2-0 கணக்கில் வெற்றி
Published on

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் பிரேசில் மற்றும் ஜப்பான் அணிகள் இடையிலான ஆட்டம் ஹூஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர்.

ஜப்பான் முன்னிலை:

கோல் கணக்கை தொடங்க இரு அணி வீரர்களும் மல்லுக்கட்ட ஜப்பான் வீரர் கிஷூ சனோ தனது அணிக்கு கோல் அடித்து அசத்தினார். ஆட்டத்தின் 29-ஆவது நிமிடத்தில் ஜப்பான் கோல் கணக்கை தொடங்க அந்த அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து பிரேசில் வீரர்கள் கோல் அடிக்க தீவிரம் காட்டிய போதிலும், ஆட்டத்தின் முதல் பாதி வரை கோல் கணக்கை தொடங்க முடியவில்லை.

ஆட்டத்தின் முதல் பாதி வரை ஜப்பான் அணி 0-1 கணக்கில் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் கோல் அடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரேசில் வீரர் கேப்ரியல் மகல்ஹெஸ் அசிஸ்ட்-இல் கேஸ்மிரோ கோல் அடித்து அசத்தினார். ஆட்டத்தின் 56-ஆவது நிமிடத்தில் பிரேசில் கோல் கணக்கை தொடங்க ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றது.

பிரேசில் அதிரடி:

சமநிலையில் இருந்து மீண்டு வெற்றி வாகை சூட பிரேசில் மற்றும் ஜப்பான் வீரர்கள் தீவிரம் காட்ட ஆட்டத்தின் இரண்டாவது பாதி மிகவும் பரபரப்பாக சென்றது. கடைசி வரை இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியாத சூழலில், ஆட்டத்தின் நேரம் நீட்டிக்கப்பட்டது.

கடைசி கட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரேசில் அணிக்கு ப்ரூனோ குய்மரிஸ் ஏற்படுத்திய செட்-அப் மூலம் கேப்ரியல் மார்டினெலி கோல் அடித்தார். இந்த கோல் மூலம் பிரேசில் 2-1 கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து ஜப்பான் தரப்பில் கோல் அடிக்கும் முயற்சி தீவிரமானது. மறுப்பக்கம் பிரேசில் அணி எதிரணியின் கோல் அடிக்கும் முயற்சிகளை வெற்றிகரமாக தடுத்து ஆடியது. ஆட்டத்தின் இறுதியில் பிரேசில் அணி 2-1 கணக்கில் வெற்றியை உறுதிப்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com