

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் பெல்ஜியம் மற்றும் செனகல் அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியின் 24-ஆவது நிமிடத்தில் செனகல் அணி தனது கோல் கணக்கை தொடங்கியது. அந்த அணியின் ஹபிப் டியாரா கோல் அடிக்க செனகல் அணி 1-0 கணக்கில் முன்னிலை பெற்றது.
செனகல் அணி முன்னிலை பெற மைதானத்திற்குள் திடீரென மூன்று ரசிகர்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டத்தின் போது ரசிகர்கள் களத்திற்குள் ஓடி வந்ததை அடுத்து, ஆட்டம் நிறுத்தப்பட்டு சில நிமிடங்கள் கழித்து மீண்டும் தொடங்கியது.
செனகல் முன்னிலை:
இடைவெளிக்கு பிறகு ஆட்டம் தொடங்க, இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரம் காட்டின. ஆட்டத்தின் 51-ஆவது நிமிடத்தில் செனகல் அணியின் மௌசா நியாஹட் அசிஸ்ட்-இல் இஸ்மைலா சர் கோல் அடித்தார். இதனால் செனகல் அணி 2-0 கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து ஆட்டத்தின் 86-ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு முதல் கோலை ரோமெலு லுகாகு அடித்தார். இவருக்கு தாமஸ் மியூனெய்ர் அசிஸ்ட் செய்தார்.
சமநிலை:
இதனால் பெல்ஜியம் அணி ஆட்டத்தில் போட்டியை ஏற்படுத்தும் வகையில் 1-2 என தனது கணக்கை தொடங்கியது. மீண்டும் சரியாக மூன்றே நிமிடங்களில் பெல்ஜியம் தனது இரண்டாவது கோலை அடித்தது. இதனால் ஆட்டம் சமநிலைக்கு வந்தது.
ஆட்டத்தின் 89-ஆவது நிமிடத்தில் லொனார்டோ ட்ரோசார்டு அசிஸ்ட் செய்ய யூரி டெய்லிமேன்ஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிராவை நோக்கி சென்றது. ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
கூடுதல் நேரத்தில் பெல்ஜியம் வீரர் யூரி டெய்லிமேன்ஸ் கோல் அடிக்க பெல்ஜியம் அணி 3-2 என முன்னிலை பெற்றது. மறுப்பக்கம் செனகல் மேற்கொண்ட கோல் அடிக்கும் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் இறுதியில் பெல்ஜியம் அணி 3-2 கணக்கில் வெற்றி பெற்றது.