

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ’இ’ பிரிவில் ஈக்வடார், ஜெர்மனி அணிகள் இடையிலான ஆட்டம் நியூ ஜெர்சியில் நேற்று நடந்தது. இதில் சிறப்பாக ஆடிய ஈக்வடார் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.
இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியை வீழ்த்திய ஈகுவடாரின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து அந்நாட்டு அதிபர் நோபோவா உத்தரவிட்டார்.
ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஈக்வடார் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.