உலகக் கோப்பை கால்பந்து: ஈக்வடார், குரோசா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா

கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
fifa world cup
Published on

23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் நடந்து வருகிறது.

இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் ‘இ’ பிரிவில் உள்ள ஈக்வடார், குரோசா அணிகள் மோதின.

தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினார்கள். ஆனால் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால்

முதல் பாதி முடிவில் 0-0 என சமனிலையில் இருந்தன.

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் எந்த அணியாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கவில்லை.

இறுதியில், ஈக்வடார், குரோசா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 0-0 என சமனில் முடிந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com