Miss You.. சக கால்பந்து வீரர் மறைவுக்கு ரொனால்டோ இரங்கல்

இப்போதுதான் போர்ச்சுகல் அணிக்காக ஒன்றாக விளையாடினோம். ஜோட்டாவின் குடும்பத்தினருக்கும், மனைவிக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Miss You.. சக கால்பந்து வீரர் மறைவுக்கு ரொனால்டோ இரங்கல்
Published on

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர். 28 வயதான அவர் 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில் சக வீரர் மறைவுக்கு பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இப்போதுதான் போர்ச்சுகல் அணிக்காக ஒன்றாக விளையாடினோம். இப்போதுதான் திருமணமும் செய்து கொண்டார். ஜோட்டாவின் குடும்பத்தினருக்கும், மனைவிக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் உங்களை மிஸ் செய்வோம்.

என கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com