உலகக் கோப்பை கால்பந்து: காங்கோவை 1-0 என வென்றது கொலம்பியா

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
columbia
Published on

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு நடைபெற்ற 'கே’ பிரிவு லீக் ஆட்டத்தில் கொலம்பியா, டாக்டர் காங்கோ அணிகள் மோதின.

போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் 0-0 என இருந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கொலம்பியாவின் டேனியல் முனோஸ் 76-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன்பின், யாரும் கோல் அடிக்கவில்லை.

இறுதியில், கொலம்பியா அணி 1-0 என காங்கோ அணியை வென்றது. கே பிரிவில் கொலம்பியா அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com