

இங்கிலாந்தில் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் விளையாடும் பிரபலமான அணிகளில் ஒன்று செல்சி.
தொடர் தோல்வி எதிரொலியால் செல்சி அணி மேனேஜர் லியாம் ரோசெனியரை பணிநீக்கம் செய்தது. தற்காலிகமாக பொறுப்பேற்ற காலும் மெக்பார்லேனையும் மேனேஜர் பொறுப்பில் இருந்து நீக்கியது.
இந்நிலையில், செல்சி கால்பந்து கிளப்பின் மேனேஜராக ஜாபி அலோன்சா (ஸ்பெயின்) நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜூலை 1-ம் தேதி முதல் ஜாபி அலோன்சோ பொறுப்பேற்பார் என்றும், அடுத்த 4 ஆண்டுக்கு இவர் நீடிப்பார் எனவும் செல்சி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது நடந்த பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் செல்சி அணி 9வது இடம் பிடித்திருந்தது.
அலோன்சோ லிவர்பூல் மற்றும் மேட்ரிட் அணிகளுக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.