

ஐபிஎல் 2026 தொடரின் 31-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இதுவரை இவ்விரு அணிகளும் ஐபிஎல் தொடர்களில் 24 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஹைதராபாத் 12 போட்டிகளிலும், டெல்லி 12 போட்டிகளிலும் சமமாக வெற்றி பெற்றுள்ளன.
நடப்புத் தொடரில் இரு அணிகளுமே தலா 3 வெற்றிகளைப் பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் ஹைதராபாத் அணி 4வது இடத்திலும், டெல்லி 5வது இடத்திலும் உள்ளன. இதனால் இப்போட்டியில் இரு அணிகளுமே வெற்றிப்பெற முனைப்பு காட்டும்.