ஐ.பி.எல். அணிக்கு பயிற்சியாளராகிறார் யுவராஜ் சிங்

இந்திய அணியின் அதிரடி இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்த யுவராஜ் சிங், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பயிற்சியாளராக செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல். அணிக்கு பயிற்சியாளராகிறார் யுவராஜ் சிங்
Published on: 

இந்திய அணியின் நட்சத்திர இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். இவர் இந்திய அணி 2007-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பைகளை வெல்லும்போது, தொடர் நாயகன் விருது வென்று அசத்தியவர். இந்திய அணியில் மிடில் ஆர்டரில் களம் இறங்கி தனது இடது கை பேட்டிங்கால் எதிரணியை அச்சுறுத்தியவர்.

இவர் சர்வதேச மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோருக்கு பேட்டிங் செய்து ஆலோசனை வழங்கி வருகிறார்.

இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ரிஷப் பண்ட்-க்கு, ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஆலோசனை வழங்கினார். இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2027-ல் பயிற்சியாளராக செயல்படுவார் எனக் கூறப்படுகிறது.

யுவராஜ் சிங் 132 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். மும்பை அணிக்காக 2019-ம் ஆண்டு விளையாடினார். அதன்பின் ஓய்வை அறிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com