மைதானத்தில் புற்களை சாப்பிடும் ரோகித் - ஜோகோவிச் படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த விம்பிள்டன்

17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.உலகக்கோப்பையை வென்றதும் மைதானத்தின் புற்களை ரோகித் சுவைத்து பார்ப்பார்.
மைதானத்தில் புற்களை சாப்பிடும் ரோகித் - ஜோகோவிச் படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த விம்பிள்டன்
Published on

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா வாங்குவார். இது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக்கோப்பை வாங்கும் புகைப்படத்தை FIFA உலகக்கோப்பை அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

பிபாவை தொடர்ந்து பிரபல டென்னிஸ் போட்டியான விம்பிள்டன் தனது இன்ஸ்டகிராம் பக்கமும் ரோகித் - நோவக் ஜோகோவிச் படத்தை பகிர்ந்துள்ளது.

உலகக்கோப்பையை வென்றதும் மைதானத்தின் புற்களை ரோகித் சுவைத்து பார்ப்பார். அந்த புகைப்படத்துடன் டென்னிஸ் மைதானத்தின் புற்களை நோவக் ஜோகோவிச் சுவைக்கும் படத்தோடு இணைத்து விம்பிள்டன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்பாம் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com