அரையிறுதிக்குள் நாங்கள் நுழையாவிட்டாலும்.. ரோமன் பவல் நெகிழ்ச்சி பதிவு

கடந்த 12 மாதங்களாக சிறந்த கிரிக்கெட்டை தொடர்ச்சியாக விளையாடி வந்திருக்கிறோம். கடைசி வரை வெற்றிக்காக போராடிய எங்கள் வீரர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
அரையிறுதிக்குள் நாங்கள் நுழையாவிட்டாலும்.. ரோமன் பவல் நெகிழ்ச்சி பதிவு
Published on

ஆண்டிகுவா:

டி20 உலகக்கோப்பை தொடரில், கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியுள்ளது.

இதன் மூலமாக சொந்த மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியுள்ளது.

இந்நிலையில் நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்குள் நாங்கள் நுழையாவிட்டாலும் கடந்த 12 மாதங்களாக சிறந்த கிரிக்கெட் போட்டிகளை ஆடினோம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோமன் பவல் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

கடைசி வரை வெற்றிக்காக போராடிய எங்கள் வீரர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஒரு பேட்டிங் குழுவாக இன்றைய ஆட்டத்தை மறக்க நினைக்கிறோம். பவுலர்கள் கொஞ்சம் கூட மனம் தளராமல் கட்டுப்படுத்தலாம் என்று போராடினார்கள். அது பாராட்டுக்குரியது. நாங்கள் இந்த டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேறவில்லை.

ஆனால் கடந்த 12 மாதங்களாக சிறந்த கிரிக்கெட்டை தொடர்ச்சியாக விளையாடி வந்திருக்கிறோம். வெஸ்ட் இண்டீஸ் அணி மீதான நம்பிக்கை எங்கள் ரசிகர்களுக்கு மீண்டும் வந்துள்ளதை பார்க்க முடிகிறது. தோல்வியின்போது, பாசிட்டிவான விஷயமாக அதனை பார்க்கிறேன். வெவ்வேறு மைதானங்களில் விளையாடியபோது ரசிகர்கள் நேரடியாக ஆதரவு அளித்ததோடு, சோசியல் மீடியாவில் கொண்டாடினார்கள் எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி.

இவ்வாறு ரோமன் பவல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com