திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த ரிஷப் பண்ட் - அக்ஷர் படேல்

ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார்.உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார்.
திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த ரிஷப் பண்ட் - அக்ஷர் படேல்
Published on

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் அக்ஷர் படேல் இன்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் முடிந்த நிலையில் வெளியே வந்தனர். இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களிடம் செல்பி எடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். இதனால், ஐபிஎல், ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. அவர் தற்போது குணமடைந்து வருகிறார்.

உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார். ஆனால் அவர் காயம் அடைந்ததையடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். அக்சர் பட்டேலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com