IPL 2026 | ஹிட்மேனை பின்னுக்குத் தள்ளி டி20 கிரிக்கெட்டில் புது சாதனை படைத்த விராட் கோலி

ஆர்.சி.பி. அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
IPL 2026 | ஹிட்மேனை பின்னுக்குத் தள்ளி டி20 கிரிக்கெட்டில் புது சாதனை படைத்த விராட் கோலி
Published on

2026 ஐ.பி.எல். தொடரில் ஆர்.சி.பி. அணியின் விராட் கோலி நல்ல ஃபார்மில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்று (ஏப்ரல் 5) நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 18 பந்துகளில் 28 ரன்களை குவத்தார். இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் புது சாதனை படைத்து அசத்தினார்.

அதன்படி டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்கு எதிராக அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். இவர் தற்போது சி.எஸ்.கே. அணிக்கு எதிராக 1,188 ரன்களை குவித்துள்ளார்.

முன்னதாக ரோகித் சர்மா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 1,161 ரன்களை அடித்து இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இதே பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,159 ரன்களை அடித்து விராட் கோலி மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்.

நேற்றைய போட்டியை பொருத்தவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட ஆர்.சி.பி. அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி. அணி 20 ஓவர்களில் 250 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய சி.எஸ்.கே. அணி 19.4 ஓவர்களில் 207 ரன்களை மட்டும் அடித்து ஆல்-அவுட் ஆனது.

X

Maalai Malar
www.maalaimalar.com