Virat Kohli | என்ன இப்படி இருக்கு? இன்ஸ்டாவில் துரந்தர் 2 ரிவ்யூ சொன்ன விராட் கோலி

அனுபவத்தை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Virat Kohli | என்ன இப்படி இருக்கு? இன்ஸ்டாவில் துரந்தர் 2 ரிவ்யூ சொன்ன விராட் கோலி
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, பிளாக்பஸ்டர் படமான 'துரந்தர் 2' குறித்த தனது விமர்சனத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குநர் ஆதித்யா தார் மற்றும் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் ஆகியோரைப் பாராட்டிய அவர், இது தனது சிறந்த 'சினிமா அனுபவம்' என்று கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 19-ஆம் தேதி வெளியான நிலையில், துரந்தர் 2 திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 1600 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. விமர்சன ரீதியிலும் இந்தப் படத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய வீரர் விராட் கோலி துரந்தர் 2 பார்த்த அனுபவத்தை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “இன்று படம் பார்த்தேன். இந்தியாவில் இது போன்ற ஒரு சினிமா அனுபவத்தை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை என்று துணிந்து சொல்வேன். அது எல்லா விதமான உணர்ச்சிகளையும் வெளிக்கொணர்ந்தது. கிட்டத்தட்ட 4 மணி நேரம் நான் ஒருமுறை கூட கண் சிமிட்டவில்லை.

ஆதித்தா தார், நீங்கள் உருவாக்கியதில் உங்கள் திறமையும் உறுதியும் பிரதிபலிக்கிறது. உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நீங்கள் ஒரு மேதை.

மேலும், அனைத்து நடிகர்களும் தங்களது பாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும், ரன்வர் சிங் இந்தப் படத்திற்குப் பிறகு நீங்கள் ஒரு புதிய உயரத்தை எட்டியுள்ளீர்கள். உங்கள் நடிப்பு அற்புதத்திற்கும் அப்பாற்பட்டது. முற்றிலும் பிரமாதம்,” என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com