U19 உலகக் கோப்பையை வென்ற அணிக்கு பாராட்டு தெரிவித்த விராட் கோலி

இந்தியா முதலில் பேட்டிங் செய்த இந்தியா 411 ரன்கள் குவித்தது.இங்கிலாந்து அணியால் 311 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
U19 உலகக் கோப்பையை வென்ற அணிக்கு பாராட்டு தெரிவித்த விராட் கோலி
Published on

19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் விளையாடிய இந்தியா 411 ரன்கள் குவித்தது. பின்னர் 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. அந்த அணியால் 311 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் விராட் கோலி இளையோர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் "மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு வாழ்த்துகள். இளையோர் கிரிக்கெட்டிலும் அதற்கு அப்பாற்பட்ட தளங்களிலும் நமது ஆதிக்கம் தொடர்கிறது. முழு அணிக்கும் மற்றும் ஸ்டாஃப்களுக்கும் எனது பாராட்டுகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com