ஆடாமல் ஜெயிச்சோமடா.. மோசமாக ஆடிய பாபர் அசாம்.. 5-வது இடத்துக்கு முன்னேறிய கோலி

பாபர் அசாம் தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் 2 இடங்கள் பின் தங்கினார். முதல் இடத்தில் ரோகித் சர்மாவும் 4-வது இடத்தில் சுப்மன் கில்லும் உள்ளனர்.
ஆடாமல் ஜெயிச்சோமடா.. மோசமாக ஆடிய பாபர் அசாம்.. 5-வது இடத்துக்கு முன்னேறிய கோலி
Published on

ஐசிசி தரவரிசைப் பட்டியலின் புதிய பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. இதில் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி முதல் இடத்தில் ரோகித் சர்மாவும் 4-வது இடத்தில் சுப்மன் கில்லும் 9-வது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும் தொடர்கிறார்கள். மற்றொரு இந்திய வீரரான விராட் கோலி 1 இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

பாபர் அசாம் தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் 2 இடங்கள் பின் தங்கினார். இதனால் 5-வது இடத்தில் கோலியும் 6-வது இடத்தில் சரித் அசலங்காவும் முன்னேறியுள்ளனர்.

இலங்கைக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் பாகிஸ்தான் வீரரான சல்மான் ஆகா 14 இடங்கள் முன்னேறி 16 இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாபர் அசாம் 29 ரன்னில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com