அவரிடம் ஜோக் அடிக்கலாம்.. முன்பு போல ஆக்ரோஷம் இல்லை.. கோலி குறித்து கவாஜா கருத்து

நீங்கள் அவரிடம் சென்று ஜாலியாக ஜோக் அடித்துக் கொண்டே பேசலாம். முன்பெல்லாம் விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார்.
அவரிடம் ஜோக் அடிக்கலாம்.. முன்பு போல ஆக்ரோஷம் இல்லை.. கோலி குறித்து கவாஜா கருத்து
Published on

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியானது கடைசியாக சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு தொடர்களிலும் தோல்வியை தழுவியதால் இம்முறை அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியை வீழ்த்த மும்முறமாக தயாராகி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தற்போது முழுவீச்சில் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது இருக்கும் விராட் கோலி மிகவும் வித்தியாசமானவர் என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கவாஜா கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறியதாவது:-

இப்போது இருக்கும் விராட் கோலி மிகவும் வித்தியாசமானவர். முன்பெல்லாம் விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார். ஆனால் இப்போது இருக்கும் விராட் கோலி ஆக்ரோஷமாக இருப்பவர் கிடையாது. எனவே நீங்கள் அவரிடம் சென்று ஜாலியாக ஜோக் அடித்துக் கொண்டே பேசலாம்.

ஆனாலும் அவர் இப்பொழுதும் நமக்கு எதிராக ரன் அடிக்கக் கூடியவர் என்பதை மறந்து விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com