சசிதேவ் அதிரடி - திருப்பூர் அணி வெற்றி பெற 134 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் அணி

இந்த ஆட்டத்தில் வென்றால் பிளேஆப் சுற்று வாய்ப்பை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உறுதி செய்துவிடும்.சேப்பாக் அணி சார்பில் சசிதேவ் அதிகமாக 45 ரன்களை எடுத்தார்.
சசிதேவ் அதிரடி - திருப்பூர் அணி வெற்றி பெற 134 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் அணி
Published on

சேலம்:

சேலத்தில் இன்று நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி, சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் டக் அவுட்டானார். கேப்டன் கவுசிக் காந்தி 2 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய ராதாகிருஷ்ணன் 24 ரன்னும், சாய் கிஷோர் 19 ரன்னும் ராஜகோபால் சதீஷ் 5 ரன்னும், சோனு யாதவ் 12 ரன்னும், ஹரீஷ்குமார் 16 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

இறுதியில், சேப்பாக் அணி 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எடுத்தது. சசிதேவ் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி 45 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து, 134 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com