என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் சிஎஸ்கே அணிக்கு விளையாடியதுதான் - சிவம் துபே

வாழ்க்கையில் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்.இளைஞர்கள், வெற்றியோ தோல்வியோ ஒவ்வொரு படியையும் இலக்கை நோக்கிச் செல்லும் படியாகக் கருத வேண்டும்.
என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் சிஎஸ்கே அணிக்கு விளையாடியதுதான் - சிவம் துபே
Published on

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியதுதான் என VIT பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் சிவம் துபே கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

வாழ்க்கையில் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். தாய் தந்தையரை மதிக்க வேண்டும். என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் சென்னை சூப்பர் கிங்க்ஸ்-க்கு விளையாடியதுதான். இளைஞர்கள், வெற்றியோ தோல்வியோ ஒவ்வொரு படியையும் இலக்கை நோக்கிச் செல்லும் படியாகக் கருத வேண்டும்.

இவ்வாறு துபே கூறினார்.

இதுவரை 51 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி சிவம் துபே, 1106 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு போட்டியில் அதிக பட்சமாக 95 ரன்கள் எடுத்துள்ளார். 2019 முதல் ஐபிஎல் தொடரில் இடம் பிடித்த இவர், பெரிதாக சோபிக்கவில்லை.

2019 முதல் 2021 வரை 3 ஆண்டுகள் விளையாடிய அவர் 24 போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ளார். 2022, 2023-ம் ஆண்டில் சென்னை அணியில் இடம் பிடித்த இவர் 27 போட்டிகளில் விளையாடியுள்ளார். மற்ற அணிகள் இவரை பெரிதும் கண்டுகொள்ளாத நிலையில் சென்னை அணியின் கேப்டன் டோனி இவருக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்தார்.

அந்த வாய்ப்புகளை அவர் சிறப்பாக பயன்படுத்தி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் இவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியில் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com