டி20 உலகக் கோப்பை 2026: ஆஸ்திரேலியாவுக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே

ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசியது.ரியான் புரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
டி20 உலகக் கோப்பை 2026: ஆஸ்திரேலியாவுக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இந்தத் தொடரின் 19வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கொலம்போவில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசியது.

இதனால் பேட்டிங்கை தொடங்கிய ஜிம்பாப்வே அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்களான ப்ரியன் பென்னெட், தடிவனஷெ ரன்குவிப்பில் கவனம் செலுத்தினர். தடிவனஷெ 21 பந்துகளில் 35 ரன்கள் (7 பவுண்டரிகள்) அடித்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரியான் புரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 30 பந்துகளில் 35 ரன்களை (4 பவுண்டரிகள்) அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ராஸா தன் பங்கிற்கு 25 ரன்களை சேர்த்தார். போட்டி முடிவில் ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை குவித்துள்ளது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் ப்ரியன் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 64 ரன்களை (7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அடித்து அசத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com