டி20 உலகக் கோப்பை: நமீபியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது பாகிஸ்தான்

நமீபியா அணி 17.3 ஓவரில் 97 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.பாகிஸ்தான் தரப்பில் உஸ்மான் தாரிக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பை: நமீபியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது பாகிஸ்தான்
Published on

டி20 உலகக் கோப்பை 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 35-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பர்ஹான் சதம் (100) அடித்து அசத்தினார்.

அதனை தொடர்ந்து விளையாடிய நமீபியா அணி, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணியில் லோரன் ஸ்டீன்காம்ப் 23, அலெக்சாண்டர் வோல்ஷெங்க் 20 ஆகிய இருவரை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இதனால் நமீபியா அணி 17.3 ஓவரில் 97 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் உஸ்மான் தாரிக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com