

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரீ யூனியன் நிகழ்ச்சி சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று கொண்டாட்டமாக நடந்துது. சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரர்களுடன் தற்போதைய வீரர்களின் பயிற்சி மற்றும் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரி நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது சிவகார்த்திகேயன் பேசியதாவது:
தோனி சார், உங்களை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். மைதானத்தில் இருந்து பார்த்துள்ளேன்.
கோடிக்கணக்கான ரசிகர்களை போல் உங்களின் கிரிக்கெட்டை நானும் ரசிக்கிறேன். உங்களின் தலைமைப் பண்புக்கு மிகப்பெரிய ரசிகன். வெற்றி, தோல்வியை கடந்து சிஎஸ்கே அணியுடன் ரசிகர்கள் எப்போதும் இருக்கிறோம்.
சி.எஸ்.கே. எப்போதும் ஒரு எமோஷன். அந்த எமோஷனுக்கு ஒரு எடுத்துக்காட்டுதான் தோனி களமிறங்கும்போது வரும் கரகோஷம்.
தோனி சேப்பாக்கத்தில் களமிறங்கினால், ஈசிஆர் அதிரும். இதுதான் மாஸ். சிஎஸ்கேமீது வைத்துள்ள நம்பிக்கை தான்அது.
சென்னை அணி எப்போதும் வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருக்கும். அதற்கு இந்த காட்டின் ராஜாவாக இருக்கும் முபாசா.. தற்போது அந்த நம்பிக்கையை இப்போது சிம்பா மீதும் வைத்துள்ளோம். சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்க்கு 2 ஆதரவு இருக்கிறது. இன்று தோனி. மற்றொன்று ரசிகர்கள்.
நீங்கள் எங்களுக்கு 6-வது கோப்பையை வென்று கொடுத்தாலே போதும். அதேபோல் சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் இணைந்திருக்கிறார். சென்னை அணியில் ஏராளமான திறமை மிகுந்த வீரர்கள் இருக்கிறார்கள். பிரெவிஸ்க்கு நான் யாரென்றே தெரியாது.
தோனியிடம் ஒரு விஷயம் மட்டும் கேட்க விரும்புகிறேன். ஒருமுறை தோனியிடம் இதுதான் உங்களின் கடைசி சீசனா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தோனி, Definitely Not என பதில் அளித்தார். அந்த பதிலை தான் ஒவ்வொரு சீசனிலும் கேட்க விரும்புகிறோம் என தெரிவித்தார்.
சிவகார்த்திகேயன் கேள்விக்கு பதிலளித்த தோனி, அதற்கு பிட்னஸ் இருக்கவேண்டும்.. அது மிகவும் கடினம். என்னுடைய பிட்னஸ் நாளுக்கு நாள் இறங்கிக்கொண்டே செல்கிறது.. இருந்தாலும் முயற்சிக்கிறேன் என தெரிவித்தார்.