சர்வதேச போட்டியில் அதிக சிக்சர்கள் - கெயில் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

ரோகித் சர்மா உலக கோப்பையில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார் ரோகித் சர்மா.
சர்வதேச போட்டியில் அதிக சிக்சர்கள் - கெயில் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா
Published on

புதுடெல்லி:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற 9வது லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய இந்தியா, ரோகித் சர்மா அதிரடி சதத்தால் 35 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

கேப்டன் ரோகித் சர்மா 84 பந்துகளில் 5 சிக்சர், 16 பவுண்டரி உள்பட 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்சர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச அளவில் 3 வகை கிரிக்கெட்டிலும் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் 556 சிக்சர்கள் அடித்த ரோகித் சர்மா முதல் இடத்திலும், 553 சிக்சர்கள் அடித்த கிறிஸ் கெய்ல் 2-வது இடத்திலும், 476 சிக்சர்கள் அடித்த அப்ரிடி 3வது இடத்திலும் உள்ளனர்.

இதேபோல், உலக கோப்பையில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார் ரோகித் சர்மா . 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com