தொடர் தோல்வியை தவிர்க்குமா ஆர்சிபி? 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ

லக்னோ அணியில் டிகாக் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.ஆர்சிபி அணி தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் சிராஜ், ரீஸ் டாப்லீ, தயாள் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர் தோல்வியை தவிர்க்குமா ஆர்சிபி? 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ
Published on

பெங்களூரு:

17-வது ஐ.பி.எல். சீசனின் இன்றைய 15-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல்- டிகாக் களமிறங்கினர். கேஎல் ராகுல் 20 ரன்னிலும் அடுத்து வந்த படிக்கல் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டிகாக் - ஸ்டோய்னிஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிகாக் அரைசதம் விளாசினார். 15 பந்துகள் சந்தித்த மார்கஸ் ஸ்டோனிஸ் 24 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்தில் டிகாக் 81 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கடைசி நேரத்தில் பூரன் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். குறிப்பாக டாப்லீ ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அசத்தினார்.

இறுதியில் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. ஆர்சிபி அணி தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் சிராஜ், ரீஸ் டாப்லீ, தயாள் ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com