இலங்கை வீரருக்கு NOC வழங்க மறுப்பு: ஆர்.சி.பி.க்கு பின்னடைவு

ஆர்சிபி அணியில் இடம் பிடித்துள்ள நுவான் துஷாராவுக்கு இலங்கை கிரிக்கெட் போர்டு தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
நுவான் துஷாரா
நுவான் துஷாரா
Published on

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்காக இரண்டு அணிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், ஆர்.சி.பி. அணிக்கு பின்னடைவு ஏற்படும் வகையில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் போர்டு தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே, ஹேசில்வுட் தொடக்கக்கால போட்டியில் விளையாடவில்லை என்று குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com