தொடர் வெற்றி: புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்தது ராஜஸ்தான்

ஐபிஎல் புள்ளி பட்டியலில் கொல்கத்தா 2ம் இடத்தில் உள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது.
தொடர் வெற்றி: புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்தது ராஜஸ்தான்
Published on

ஜெய்ப்பூர்:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 183 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 189 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டாம் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது இடத்திலும் உள்ளன. பெங்களூரு அணி 4 தோல்வியுடன் 8வது இடத்தில் உள்ளது.

நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் ஆடிய 3 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிக்கணக்கை தொடங்காமல் கடைசி இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com