9-வது அணியாக புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல் தொடரின் 19-வது சீசனுக்காக புதிய ஜெர்சியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று அறிமுகம் செய்தது.
9-வது அணியாக புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்
Published on

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் வருகிற 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

ஒவ்வொரு அணியும் தங்களது அணி தொடர்பான புதிய செய்திகளை சமூக வலைதளங்களில் அறிவித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு அணியும் புதிய ஜெர்சியை அறிமுகம் செய்து வருகின்றன. இதுவரை 8 அணிகள் தங்களின் புதிய ஜெர்சிகளை அறிமுகம் செய்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணி மட்டும் புதிய ஜெர்சியை அறிமுகம் செய்யாமல் இருந்தது.

இந்நிலையில் 9-வது அணியாக ராஜஸ்தான் அணி தங்களது புதிய ஜெர்சியை இன்று அறிமுகம் செய்தது. இந்த ஜெர்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com