போஸ்டர் அடி, அண்ணன் ரெடி.. ஓய்வு சர்ச்சைக்கு ரகானேவின் சரவெடி பதில்

நான் இளமையாக இருக்கிறேன். என்னுள் நிறைய கிரிக்கெட் உள்ளது. கடந்த ஒரு ஆண்டாக எனது உடற்தகுதிக்காக நான் நிறைய உழைத்துள்ளேன்.
போஸ்டர் அடி, அண்ணன் ரெடி.. ஓய்வு சர்ச்சைக்கு ரகானேவின் சரவெடி பதில்
Published on

இந்திய அணி 2 டெஸ்ட் போட்டி 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

இந்நிலையில் நான் இளமையாக இருக்கிறேன். என்னுல் நிறைய கிரிக்கெட் உள்ளது என இந்திய அணியின் துணை கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரகானே கூறியதாவது:-

நான் இளமையாக இருக்கிறேன். என்னுள் நிறைய கிரிக்கெட் உள்ளது. கடந்த ஒரு ஆண்டாக எனது உடற்தகுதிக்காக நான் நிறைய உழைத்துள்ளேன். பேட்டிங்கில் சில நுணுக்களை கற்று கொண்டு பயிற்சி எடுத்துள்ளேன். நான் எனது கிரிக்கெட்டை மிகவும் ரசிக்கிறேன், எனது பேட்டிங்கை ரசிக்கிறேன். நான் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. ஒவ்வொரு ஆட்டமும் தனிப்பட்ட முறையில் மற்றும் குழுவின் பார்வையில் முக்கியமானது. நான் அதில் தான் கவனம் செலுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com