

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 26-ந்தேதி தொடங்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார். அமெரிக்கா- ஈரான் இடையில் போர் நடைபெற்று வருவதால் பிராந்திய பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தொடக்க போட்டிகளை ரசிகர்கள் மைதானத்தில் அமர்ந்து காண அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று இரவு முதல் வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் வந்தடைவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் அனுமதி மறுப்பால், அணிகளுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். பிப்ரவரி மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டதால் தற்போது, காலதாமதமாக தொடங்குகிறது.