500 ஒருநாள் போட்டிகளில் வெற்றி - 3வது அணி என்ற பெருமையை பெற்றது பாகிஸ்தான்

சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 500 வெற்றி கண்டுள்ளது. 594 வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தில் உள்ளது.
500 ஒருநாள் போட்டிகளில் வெற்றி - 3வது அணி என்ற பெருமையை பெற்றது பாகிஸ்தான்
Published on

ராவல்பிண்டி:

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 288 ரன்கள் சேர்த்தது. டேரில் மிட்செல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 48.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் 500 வெற்றி கண்ட மூன்றாவது அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றது.

இந்த வரிசையில் 594 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், 539 வெற்றிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com