Womens T20 World Cup | பாத்திமா சனா தலைமையில் பாகிஸ்தான் மகளிர் அணி அறிவிப்பு

பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் இந்திய அணியை ஜூன் 14-ம் தேதி சந்திக்கிறது.
Womens T20 World Cup | பாத்திமா சனா தலைமையில் பாகிஸ்தான் மகளிர் அணி அறிவிப்பு
Published on

ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. ஜூன் 12-ம் தேதி தொடங்கி ஜூலை 5ம் தேதி வரை நடைபெறுகிறது.

பாகிஸ்தான் மகளிர் அணி தனது முதல் போட்டியில் இந்திய அணியை ஜூன் 14-ம் தேதி சந்திக்கிறது.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் விவரம்:

பாத்திமா சனா (கேப்டன்), குல் பெரோசா, ஆயிஷா ஜாபர், இராம் ஜாவேத், ஈமான் பாத்திமா, ஆலியா ரியாஸ், நடாலியா பர்வேஸ், சாயிரா ஜபீன், முனீபா அலி, துபா ஹாசன், ரமீன் ஷமீம், சாடியா இக்பால், நஷ்ரா சந்து, டயானா பெய்க், தஸ்மியா ரூபாப்

இதில் ஈமான் பாத்திமா, நடாலியா பர்வேஸ், ரமீன் ஷமீம், சாயிரா ஜபீன், தஸ்மியா ரூபாப் ஆகியோர் உலகக் கோப்பையில் முதல் முறையாக விளையாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com