சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து

முதலில் ஆடிய நியூசிலாந்து 362 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 312 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து
Published on

லாகூர்:

சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி லாகூரில் நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் சதமடித்து அசத்தினர். டேரில் மிட்சல், கிளென் பிலிப்ஸ் 49 ரன்கள் எடுத்தனர்.

2வது விக்கெட்டுக்கு ரவீந்திரா-வில்லியம்சன் ஜோடி 164 ரன்கள் குவித்தது.

தென் ஆப்பிரிக்கா சார்பில் நிகிடி 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 363 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. கேப்டன் பவுமா 56 ரன்னும், வான் டெர் டுசன் 69 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

கடைசி கட்டத்தில் டேவிட் மில்லர் தனி ஆளாகப் போராடி சதமடித்தார். அவர் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா 312 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நியூசிலாந்து சார்பில் மிட்செல் சாண்ட்னர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

துபாயில் வரும் 9-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவுடன் மோதுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com