சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார் கேன் வில்லியம்சன்

நியூசிலாந்தின் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் கேன் வில்லியம்சன்.
kane williamson
Published on

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராக கேன் வில்லியம்சன் தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

இவர் 48 சதங்கள் மற்றும் 6 இரட்டைச் சதங்கள் உட்பட மொத்தம் 19,346 ரன்களைக் குவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்காக 378 போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் எண்ணற்ற சாதனைகளைப் படைத்துள்ளார்.

அவரது இந்த ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com