சாம்பியன்ஸ் டிராபி பற்றி யோசிக்கவில்லை.. டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கவேண்டும்- கருண் நாயர்

விஜய் ஹசாரே தொடரில் 779 ரன்கள் குவித்த கருண் நாயர் தொடர் நாயகன் விருதை வென்றார். சர்வதேச டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் முச்சதம் அடித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி பற்றி யோசிக்கவில்லை.. டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கவேண்டும்- கருண் நாயர்
Published on

அண்மையில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விதர்பா அணியை வீழ்த்தி கர்நாடகா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 779 ரன்கள் குவித்த கருண் நாயர் தொடர் நாயகன் விருதை வென்றார்.

விஜய் ஹசாரே தொடரில் மிக அற்புதமாக விளையாடிய கருண் நாயர் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் கருண் நாயர் இடம்பெறவில்லை. இது தொடர்பாக பேசிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், "கருண் நாயரின் 750 சராசரி என்பது அபரிதமானது. ஆனால் அணியில் 15 பேருக்கு மட்டுமே இடம் என்பதால், அனைவரையும் அணியில் சேர்ப்பது சாத்தியமில்லாதது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அஜித் அகர்கர் கூறியது தொடர்பாக பேசிய கருண் நாயர், "சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் எனது பெயர் பரிசீலிக்கப்படும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதற்காக நான் நன்றி கூறி கொள்கிறேன். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு. இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். அது மட்டும் தான் என் மனதில் உள்ளது" என்று தெரிவித்தார்.

இந்தியாவுக்காக 2027 ஆம் ஆண்டில் கருண் நாயர் தனது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இதுவரை அவர் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 62.33 என்ற சராசரியுடன் 374 ரன்கள் அடித்துள்ளார். அதில் 303 நாட் அவுட் என்ற ஒரு முச்சதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com