

சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.
ஐபிஎல் 2026 தொடர் இந்த மாத கடைசி தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின் போது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.
அதன் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக மைதானத்தில் போட்டிகளை நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.
அங்கு இந்த ஆண்டு போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் கர்நாடக அரசு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
மைதானத்தில் புதிதாக நுழைவு வாயில்கள், அலைப்படுத்தப்பட்ட வெளியேறும் வழிகள் மற்றும் அவசர கால் வெளியேற்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மைதானத்தின் தயார்நிலை குறித்து நிபுணர் குழு அளித்த அறிக்கையை பரிசீலித்த பிறகு கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா தலைமையில் விதான சவுதாவில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆர்சிபி அணி சின்னசாமி மைதானத்தில் 5 லீக் போட்டிகளில் விளையாடும்.
போட்டிகள் நடத்தப்படும் போது 35,000 பார்வையாளர்கள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.