IPL 2026 RCB vs CSK | முதல் வெற்றியை ருசிக்குமா சிஎஸ்கே? இன்று ஆர்.சி.பி.யுடன் பலப்பரீட்சை

பெங்களூரு சின்னசாமி மைதானம் சேஸிங்கிற்கு சாதகமானது. இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.
IPL 2026 RCB vs CSK | முதல் வெற்றியை ருசிக்குமா சிஎஸ்கே? இன்று ஆர்.சி.பி.யுடன் பலப்பரீட்சை
Published on

ஐ.பி.எல். 2026 சீசன் கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று வரை 9 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

மதியம் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7.30 நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி.- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஆர்.சி.பி. அணி முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்திய தெம்புடன் களம் இறங்குகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 200 ரன்களுக்கு மேல் அடித்த நிலையிலும் ஆர்சிபி சிறப்பாக சேஸிங் செய்தது.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் 127 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் 209 ரன்கள் அடித்தும் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் வலுவான பேட்டிங் ஆர்டர் உள்ளது. இதை பயன்படுத்தி அதிக ரன்கள் அடிக்க வேண்டியது அவசியம். பெங்களூரு சின்னசாமி மைதானம் சேஸிங்கிற்கு சாதகமானது. முதலில் பேட்டிங் செய்யும் அணி 225 ரன்கள் அடித்தாலும் சேஸிங் செய்ய வாய்ப்புள்ளது. இதனால் டாஸ் இன்றைய போட்டியில் முக்கிய பங்கு வகிக்கும். சிஎஸ்கே அணியில் பந்து வீச்சு பலவீனமாக உள்ளது. பந்து வீச்சில் இன்னும் அதிக கவனம் செலுத்தினால் முதல் போட்டியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com