

ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் போட்டியில் சி.எஸ்.கே.- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஏப்ரல் 26-ந்தேதி (ஞாயிறு) இரண்டு போட்டிகளில் நடைபெற இருக்கின்றன. மதியம் 3.30 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மே 21-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் இரு அணிகளும் மோதும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.
தற்போது இந்த இரண்டு போட்டிக்கான அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 26-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் எனவும், மே 21-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கும் போட்டி அகமதாபாத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மற்றும் அகமதாபாத்தில் வருகிற 26-ந்தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஐபிஎல் தெரிவித்துள்ளது.