IPL 2026 | குறைந்த பந்துகளில் 400 ரன்கள்: வைபவ் சூர்யவன்ஷி சாதனை

பேட்ஸ்மேன்களில் முதலிடம் பிடித்த வைபவ் சூர்யவன்ஷி ஆரஞ்சு தொப்பியை தன்வசமாக்கினார்.
IPL 2026 | குறைந்த பந்துகளில் 400 ரன்கள்: வைபவ் சூர்யவன்ஷி சாதனை
Published on

நடப்பு ஐ.பி.எல். சீசனில் 400 ரன்களை விரைந்து எட்டி புதிய சாதனை படைத்துள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி.

டி20 கிரிக்கெட்டில் தனது அதிரடி ஆட்டம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி.

அவர் தான் விளையாடும் ஒவ்வொரு இன்னிங்சிலும் புதிய சாதனையை படைத்து வருகிறார்.

நியூ சண்டிகரில் நேற்று நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 16 பந்துகளில் 43 ரன்களை விளாசினார் வைபவ் சூர்யவன்ஷி. இதன்மூலம் ராஜஸ்தான் அணி 223 ரன்கள் என்ற இலக்கை எட்டியது.

இந்நிலையில், இந்த சீசனில் 9 இன்னிங்சில் விளையாடி 168 பந்துகளில் 400 ரன்களை வைபவ் சூர்யவன்ஷி குவித்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரே சீசனில் குறைந்த பந்துகளில் விரைவாக 400 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

மேலும், பேட்ஸ்மேன்களில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசமாக்கினார்.

முன்னதாக, 2019 சீசனில் இதே 400 ரன்களை ஆண்ட்ரே ரஸல் 188 பந்துகளிலும், 2024 சீசனில் அபிஷேக் சர்மா 195 பந்துகளிலும் எடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com