IPL 2026 | ஜெய்ஸ்வால் சாதனை சமன் - 13 பந்தில் உர்வில் படேல் அரை சதம்

உர்வில் படேல் ஆரம்பம் முதலே சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.
IPL 2026 | ஜெய்ஸ்வால் சாதனை சமன் - 13 பந்தில் உர்வில் படேல் அரை சதம்
Published on

ஐபிஎல் தொடரின் 53 வது லீக் ஆட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில் சிஎஸ்கே, லக்னோ அணிகள் மோதின. முதலில் ஆடிய லக்னோ அணி 203 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி ஆடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 14 பந்தில் 28 ரன் குவித்து அவுட்டானார்.

2வது விக்கெட்டுக்கு ருதுராஜ் கெய்க்வாட்டுடன் உர்வில் படேல் இணைந்தார். அவர் ஆரம்பம் முதல் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

அவர் 13 பந்தில் 7 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 50 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.

ஐபிஎல் தொடரில் அதிவவேகமாக அரை சதம் கடந்த ஜெய்ஸ்வால் சாதனையை சமன் செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com