

சென்னை:
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள்:-
* முதலமைச்சரின் நேரடிக்கட்டுப்பாட்டில் தனித்துறை உருவாக்கப்பட்டு, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
* அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்படும்.
* தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை கொண்டு வரப்படும்.
* விவசாயத்திற்கு தனி பட்ஜெட்.
* மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கூட்டுறவு சங்க கடன்கள் தள்ளுபடி.
* பள்ளிகளில் காலையில் ஊட்டச்சத்தாக மாணவர்களுக்கு பால் வழங்கப்படும்.
* சட்டசபை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்படும்.
* மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.
* பணியின் போது உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.
* மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.
* புதிதாக 200 தடுப்பணைகள் கட்டப்படும்
* மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யயப்படும்.
* அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 40 சதவீத ஒதுக்கீடு.
* வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்.
* ரேசனில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படுவதுடன் உளுத்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்.
* ஏழை மக்கள் பசி தீர 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும்.
* போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்.
* தனியார் துறையிலும் இடஒதுக்கீடு கொண்டு வரப்படும்.
* விவசாயிகள் புதிய மின்மோட்டார் வாங்க ரூ.10,000 வழங்கப்படும்.
* 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும்.
* நகரப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை.
* எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஆட்டோ தொழிலாளர்கள் ஆட்டோ வாங்க ரூ.10000 மானியமாக வழங்கப்படும்.
* பயிற்சி முடித்து காத்திருக்கும் 205 அர்ச்சகர்களுக்கு உடனடியாக பணி வழங்கப்படும்.
* பத்திரிகையாளர், ஊடகவியலாளர்களுக்கு தனி நலவாரியம்.