பிரதமர் மோடி பற்றி காங்கிரஸ் பேச்சாளர் நெல்லை கண்ணன் மீண்டும் சர்ச்சை பேச்சு

நெல்லையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேட்டை மல்லிமார் தெருவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.
நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன்
Published on

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பேச்சாளருமான நெல்லை கண்ணன் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி குறித்து சர்ச்சையாக பேசி சிக்கினார்.

அப்போது அவர் மேலப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை சோலிய முடிங்க என்று பேசியது சர்ச்சைக்குள்ளானது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு நெல்லையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேட்டை மல்லிமார் தெருவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய நெல்லை கண்ணன் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா தலைவர்களை விமர்சித்து பேசினார்.

மேலும் உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரையும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com