பா.ஜ.க. தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக மிஸ்டுகால் மூலம் பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றது.
பாஜக
பாஜக
Published on

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா உள்ளது. இதில் பா.ஜனதா 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். பா.ஜனதா, கட்சி தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக மிஸ்டுகால் மூலம் பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றது.

மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு கருத்துப்பெட்டி வைக்கப்பட்டு அதில் பொதுமக்கள் போட்ட கருத்துக்களையும் சேகரித்து அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு, செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன.

இந்த நிலையில், பா. ஜனதாவின் தேர்தல் அறிக்கை நாளை சென்னையில் வெளியிடப்படுகிறது.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். மாநில தலைவர் எல்.முருகன் பெற்றுக்கொள்கிறார். இதில் தமிழ்நாட்டுக்கு புதிய திட்டங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com