IPL 2026 | இஷான் கிஷன் - அனிகேத் அதிரடி: RCB அணிக்கு 202 ரன்கள் இலக்கு நிர்ணயித்த SRH

ஆர்சிபி அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 201 ரன்கள் குவித்தது.
IPL 2026 | இஷான் கிஷன் - அனிகேத் அதிரடி: RCB அணிக்கு 202 ரன்கள் இலக்கு நிர்ணயித்த SRH
Published on

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு- ஐதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹேட் களமிறங்கினர். தடுமாற்றத்துடன் விளையாடிய இருவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். அபிஷேக் 8 பந்தில் 7 ரன்களுடனும் டிராவிஸ் ஹேட் 9 பந்தில் 11 ரன்னிலும் வெளியேறினர். அதனை தொடர்ந்து நிதிஷ் குமார் 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதனையடுத்து இஷான் கிஷன் மற்றும் கிளாசன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 38 பந்தில் 80 ரன்கள் குவித்து வெளியேறினார்.

நிதானமாக விளையாடிய கிளாசன் 31 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சலில் 9, துபே 3, ஷர்சல் படேல் 0 ரன்னில் வெளியேறினர். ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய அனிகேத் வர்மா 18 பந்தில் 43 ரன்கள் குவித்தார்.

இதனால் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணி தரப்பில் ஜேக்கப் டஃபி, ஷேப்பர்ட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com