ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்கள்: சாய் சுதர்சன் சாதனை

டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்கள்: சாய் சுதர்சன் சாதனை
Published on

ஐ.பி.எல்.தொடரின் 34 வது லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது.

அத்ன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன், சுப்மன் கில் இறங்கினர். ஆரம்பம் முதலே சாய் சுதர்சன் அதிரடியாக ஆடினார். 33 பந்தில் சாய் சுதர்சன் அரை சதம் கடந்தார்.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் அதி வேகமாக 2000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை சாய் சுதர்சன் படைத்துள்ளார்.

47 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சாய் சுதர்சன் 2000 ரன்களைக் கடந்தார். முன்னதாக, கிறிஸ் கெயில் 48 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களைக் கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com